Latest Movie :

VAANGA PAZHAGALAM

                              அட.. ப்ளாக் எழுதணும்னு ரொம்ப நாளா ஆசை பட்டேன், ஆனா இப்போ ஏன் எழுதுறேனா .. ரொம்பலாம் யோசிக்காதிங்க இப்ப தான் டைம் கிடைச்சிச்சி.. சமீப காலமா நிறைய பேர் ப்ளாக் எழுதுறாங்க பா.. சிலது ரொம்ப கேவலமா இருக்கு.. சிலது ரொம்ப அற்புதமா இருக்கு.. என்னுடைய ப்ளாக முடிஞ்ச வரைக்கும் ரெண்டுத்துக்கும் நடுவுல இருக்குற மாதிரி பாத்துகிறேன்..


                             சரி நான் எதைப்பத்தி எழுத போறேன் ... நம்ம எல்லாருக்குமே பார்க்க ரசிக்க பேச புடிச்ச.. அட அதேதாங்க .. கரெக்டா கெஸ் பண்ணிட்டிங்க.. நம்ம சினிமாவே தான் ,அதோட சேர்த்து வேறு சில பல விஷயங்கள் பத்தியும் தான்..... எத்தனையோ பேர் அதைப்பத்தி எழுதும் போது இவன் என்ன புதுசா எழுத போறேன்னு நீங்க நினைக்கறது சத்தியமான உண்மை.. நாம எழுதி ஒரு நாலு பேருக்கு புடிச்சிச்சினா நமக்கு சந்தோசம் தானே  பா...
                             எதுக்குடா சினிமாவ எடுத்தேன்னு நினைக்கிறிங்களா... எனக்கு சினிமாவ புடிச்ச அளவுக்கு வேற எதுவுமே புடிக்கிலைங்க.. சினிமான எனக்கு ரொம்ப புடிக்கும்..அதுக்குனு பயப்புடாதிங்க.. சினிமா பத்தி மட்டும் இல்லாம முடிஞ்சா வரைக்கும் நிறைய விஷயங்கள் பத்தி பேசலாம்.. ப்ளாக் எழுதுறவங்கள ஒவ்வொருத்தங்க ஒவ்வொரு genre-ல சம ஸ்ட்ராங்கா இருப்பாங்க.. என்ன கேக்குறிங்களா.. நாம எதுலயுமே ஸ்ட்ராங்லாம் இல்ல பா.. (நான் சினிமா genre-ல சொன்னேன்.. அதுக்குள்ள எதாவது நினைக்கிறது..)நிறைய படம் பார்ப்பேன்.. அதுனால எனக்கு என்ன ஒரு படத்த பத்தி தோணுதோ.. உண்மையா சொல்லுவேன்.. என் ப்ளாக்-ah படிச்சி ஒருத்தங்க ஒரு படத்த பாத்திட்டு.. அட அவன் கரெக்டா தான்யா போட்டு இருக்கான்னு நினச்சா.. அது போதும் நமக்கு..
                               நாம ஒவ்வொருத்தங்களும் சினிமாவ ரொம்ப பிடிக்க நிறைய காரணம் இருக்கலாம்... ஆனா சினிமா பத்தி நல்லா தெரிஞ்சிக்க.. அத பத்தி பேச அலசி ஆராய நமக்கு ஒரு நண்பன் கண்டிப்பா இருக்கணும்.. அப்படி எனக்கு நண்பனா இருந்து இந்த படம் நல்லா இருக்கும்,இந்த படம் நல்லா இருக்காது, இந்த படத்தோட மியூசிக் நல்லா இருக்கும் , இந்த படத்தோட ஒளிப்பதிவு நல்லா இருக்கும்.. அப்படின்னு சொல்லி என்ன வழினடத்துனதுல முக்கிய பங்கு இந்த ரெண்டு முகநூல் குழுமத்திற்கும் உண்டு.. அதுக்கு நான் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.. அந்த குழுமத்துல இருக்குற ஒவ்வொரு நண்பருக்கும் என் நன்றி.. அந்த குழுமத்திற்கு செல்ல வேண்டுமென்றால் , அந்த குழுமத்தின் பெயரை அழுத்தவும்.. Thirst For Cinema , Freaking Awesome Movies ..
                              சரி blog-னு ஒன்னு ரொம்ப நாளா ஆரம்பிக்கணும்னு நினச்சேன் ஆரம்பிச்சாச்சு.. ஹையியோ இப்ப படிக்க ஆளு வேணுமே.. அது படிக்கிற உங்க கைல தான் இருக்கு.. என் ப்ளாக்கு வந்து படிக்கிற உங்களுக்கு ஒரு வேலை என்னுடைய எழுத்து புடிச்சி இருந்துச்சினா .. தயவு செய்து லைக் , ஷேர், follow பண்ணுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் ( உடனே யாரா இவன் லைக்கு  பிச்ச எடுக்குறான்னு யாரும் சொல்லிடாதிங்க.. நீங்க ஷேர் பண்ணிங்கனா தான் மத்தவங்களுக்கு தெரியும்..) இவ்ளோ தூரம் பொறுமையா படிச்சா அந்த இதயங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் சேர்ந்த வணக்கம்....!!
                             ப்ளாக் எழுதணும்னு எனக்கு ஆசையை ஏற்படுத்திய  http://karundhel.com/ , http://arjiththala.blogspot.sg/ , http://kanavuthirutan.blogspot.com/ , http://killadiranga.blogspot.in/  அவர்களுக்கு என் நன்றிகள்..!!

பி.கு : எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும்.. முதல் தடவை தமிழில் எழுதுகிறேன்... 
Share this article :

+ comments + 2 comments

16 August 2014 at 00:46

முதல் தடவையா இங்கே வரேன்.... சூப்பர்..!!
சினிமா பத்தி எழுத விரும்பும் அனைவருமே என் அருமை நண்பர்களே..!!
தொடர்ந்து எழுதுங்க.. தொடர்ந்து வருவேன் :)

16 August 2014 at 00:49

அப்றம், கமெண்ட் போடும்போது வேர்ட் வெரிஃபிகேஷன் வருது.. அத தூக்குங்க.. இல்லேன்னா வாசகர்கள் ஒவ்வொரு முறையும் கமெண்ட் போடும்போது அது வந்து வெறுப்பேத்தும்.. அப்றம் கமெண்ட் போட ஆசையிருந்தாலும் போடமாட்டாங்க..!! எப்டி வெரிஃபிகேஷனை தூக்குறதுனு தெரியலன்னா ஃபேஸ்புக்ல மெஸேஜ் பண்ணுங்க..

Post a Comment